பெற்றோர், பள்ளி நிர்வாகிகளுக்கு கமல் கோரிக்கை
சென்னை - கும்பகோணம்:
கும்பகோணம் தீ விபத்தில் எத்தனை அறிவாளிகளை, எத்தனை தலைவர்களை தீ தின்றதோ என்று நடிகர்கமல்ஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.
தென் கெரியாவில் உள்ள கமல்ஹாசன், அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
கும்பகோணத்தில் நடந்த விபத்துக்கான அனுதாபங்களை மற்றவர்கள் போல நானும் சொல்ல உணர்ச்சிப் பூர்வமாகஉந்தப்படுகிறேன்.
அதே நேரத்தில் துக்க விசாரிப்போடு, நிதி சேகரிப்போடு கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைத்து விடக்கூடாது.
குழந்தைகளை இழந்த பெற்றோர் கையில் எவ்வளவு பணத்தை வைத்து திணித்தாலும் அது நஷ்ட ஈடாகாது.
பெரும் விலை கொடுத்து, படிக்கச் செல்லும் பாலகர்களை பறி கொடுத்ததில் இருந்து, ஒரு பாடம் கற்றதாகத்தான்கொள்ள வேண்டும்.
யார் செய்த குற்றத்தினால் இந்த விபத்து நடந்தது என ஆராய முற்படுபவர்கள் வழக்கமாக அரசையும்,தீயணைப்போரையும் குறை கூறுவர், ஆனால் சமூக நேசர்கள் மட்டுமே உண்மைக் குற்றத்தை ஒப்புக் கொள்வர்.
அஜாக்கிரதை எனும் குற்றத்தை நம்மில் பெரும்பாலானோர் செய்கின்றோம். அதனால்தான் ஸ்ரீரங்கம் கல்யாணமண்டபம், ஸ்பென்சர் பிளாசா, சிவாஜியின் அன்னை இல்லம், கும்பகோணம் சிறுவர் பள்ளி என பல இடங்களிலும்தீ விபத்துக்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து, சமுதாய உணர்வு உள்ளவர்கள், அது இல்லாதவர்களுக்கு உணர்த்த வேண்டும். தீ அபாயமில்லாமல்நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது முதல் கடமை. இதற்கு அரசாங்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்.
இனி தமிழகப் பள்ளிகளில் மட்டுமல்லாமல், இந்தியப் பள்ளிகள் எதிலும் இதுபோன்ற அஜாக்கிரதையால் ஏற்படும்அபாயம் நிகழக் கூடாது. இந்தப் பாடம் 100 குழந்தைகளின் உயிரில் எழுதித் தரப்பட்டிருக்கிறது.
100 குழந்தைகளின் உயிரைக் கருக்கி எழுதிப் படித்திருக்கிறோம். அவரவர் இல்லங்களில் தீ விபத்து ஏற்படாமல்பாதுகாப்பது அவரவர் கடமை. பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது பாதுகாப்பான இடமா எனபரிசீலியுங்கள்.
பிள்ளைகளுக்காக பள்ளி கட்டுபவர்கள் பெற்றோருக்கும் முன், ஜாக்கிரதையாக இருங்கள். எத்தனைஅறிவாளிகளை, எத்தனை தலைவர்களை அந்தத் தீ தின்றதோ தெரியாது. இனி தெரிந்து செய்யவேண்டியதையாவது சரிவரத் தெரிந்து கொளவோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 12 லட்சம் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
கும்பகோணத்தில் விஜயகாந்த்:
இதற்கிடையே நடிகர் விஜயகாந்த் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும்குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாது. அரசாங்கம் நிதியுதவிகொடுத்துள்ளது. நடிகர் சங்கம் மூலம் இதுவரை 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது.
நான் ரூ. 10 லட்சம் தருவதாக அறிவித்திருந்தேன். ஆனால் அந்தப் பணம் முதலமைச்சர் நிவாரண நிதிக்குத்தான்போகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காது என்பதை இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். எனவேஅந்தப் பணம் நாளையோ நாளை மறுநாளோ மன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் சங்கர் ஆகியோர்மூலம் மாவட்ட ஆட்சியரிம் கொடுக்கப்படும்.
பள்ளிக்கூடங்களுக்கென்று இருக்கும் சட்டத்தை யாரும் கடைபிடிப்பதில்லை. இது போன்ற பிரச்சினைகளுக்குமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்னுடைய படங்களில் இது தொடர்பான காட்சிகள்இடம்பெறும் என்றார்.
பின்னர் அவர் கிருஷ்ணா பள்ளிக்கூடத்தை சென்று பார்வையிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications