குடந்தையில் அத்வானி, ரூ.25 லட்சம் நிவாரணம்
சென்னை:
கும்பகோணத்தில் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்வதாக பாஜக தலைவர்வெங்கையா நாயுடு அறிவித்தார்.
கும்பகோணம் செல்வதற்காக நேற்று இரவு சென்னை வந்த அத்வானியும், வெங்கையா நாயுடுவும், இன்று காலைதிருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் சென்றனர்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு அவர்களது பெற்றோருக்குஆறுதல் கூறினர். விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களையும் அவர்கள் ஆறுதல்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், தமிழக அரசு அமைத்துள்ள நீதிக் கமிஷனின் அறிக்கைக்குப்பிறகு தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பள்ளிக் கூடங்களின்பாதுகாப்புக்கு மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
உடன் இருந்த வெங்கையா நாயுடு பேசுகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக நாடு தழுவிய அளவில்விதிமுறைகள், கோட்பாடுகள் வகுக்கப்பட வேண்டும். பாஜக சார்பில் இறந்ததோரின் குடும்பங்களுக்கு ரூ. 25லட்சம் நிதியுதவி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications