பிளாட்பாரத்தில் சட்டமன்றம்: எம்எல்ஏக்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

MLAsசட்டமன்றம் அமைந்துள்ள சென்னை கோட்டை முன், காவல்துறையினரின் தடையையும் மீறி திமுகதலைமையிலான எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று காலை உண்ணாவிரதம் நடத்தினர். அப்போதுநடைபாதையிலேயே அவர்கள் சட்டமன்றத்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்களை கைது செய்து பஸ்களில் அழைத்துச் சென்ற போலீசார், அம்போவென பஸ்களில்விட்டுவிட்டுச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏக்கள் அண்ணா சாலையில் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

சட்டசபைக் கூட்டத் தொடரை வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்குஎதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. பல மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கவேண்டியிருக்கும் நிலையில் வெறும் 10 நாட்கள் மட்டும் அவையை நடத்திவிட்டு, பிரச்சனைகளைசந்திக்காமலேயே தப்ப முதல்வர் ஜெயலலிதா முயல்வதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காலை 10.30 மணிக்குத் தொடங்கிய இந்த உண்ணாவிரதத்துக்கு திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்அன்பழகன் தலைமை வகித்தார். துரைமுருகன், ஸ்டாலின், ஜி.கே.மணி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்,ஹேமச்சந்திரன், பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 78 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையையும் மீறி இன்றுகாலை எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதத்தைத் துவக்கினர்.

முன்னதாக சட்டமன்றத்தில் உள்ள அன்பழகனின் அறையில் பா.ம.க தலைவர் மணி தலைமையிலான அவரது கட்சிஎம்.எல்.ஏக்களும், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தலைமையில் காங்கிரஸ் எல்.ஏக்களும், திமுக, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களும் கூடி விவாதித்த பின்னர் அங்கிருந்து உண்ணாவிரதம்நடக்கும் நடைபாதைக்கு ஊர்வலமாக வந்தனர்.

ஜனநாயகத்தையே மதிக்காமல் அதிமுக அரசு செயல்படுவதாகக் கோஷமிட்டபடியே உண்ணாவிரதத்தைஆரம்பித்தனர். அப்போது அங்கு வந்த இணை கமிஷ்னர் சைலேந்திரபாபு தலைமையிலான போலீஸ்படை அங்கு வந்து உண்ணாவிரதத்தை வேறு இடத்தில் நடத்துமாறு கோரியது. அதை ஏற்கஎம்.எல்.ஏக்கள் மறுத்துவிட்டனர்.

இந் நிலையில் நடைபாதையிலேயே எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தை நடத்தினர். மார்க்சிஸ்ட்எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரனை சபாநாயகராக தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள், பட்ஜெட் மீதான விவாத்தையும்நடைபாதையிலேயே நடத்திக் காட்டினர். அப்போது அதிமுக அரசை மிகக் கடுமையாக அவர்கள் தாக்கிப்பேசினர்.

முதல்வருக்கு ஆதரவாக ஜால்ரா போடும் சபாநாயகர் என்று சொல்லி, காளிமுத்துவைக் கிண்டலடித்தும்உறுப்பினர்கள் பேசினர். இந்த நடைபாதை சட்டமன்றத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சட்டமன்றத்தில் காளிமுத்து எப்படி செயல்படுவார் என்பதை அங்கு கூடிய மக்களுக்கு சுட்டிக் காட்டும் வகையில்,காரணமே இல்லாமல் சில உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் ஹேமச்சந்திரன்உத்தரவிட்டபோது பொது மக்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், பிளாட்பாரத்தில் சட்டமன்றத்தை நடத்தியஎதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களை என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர் கையைப்பிசைந்து கொண்டு நின்றனர்.

ஒரு வழியாய், இவர்களைக் கைது செய்ய உத்தரவு வந்ததையடுத்து 5 பஸ்களை போலீசார் கொண்டுவந்தனர். அனைவரையும் பஸ்களில் ஏறுமாறு போலீசார் கெஞ்சினர். கடந்த காலத்தைப் போல தூக்கிபஸ்சில் எறிவதையெல்லாம் விட்டுவிட்டு, அவர்களை அமைதியாகக் கூட்டி வந்து பஸ்களில்ஏற்றினர்.

எம்.எல்.ஏக்களை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு அழைத்துச் செல்வதாக போலீசார்கூறினர். அதை நம்பித்தான் எம்.எல்.ஏக்கள் பஸ்களில் ஏறினர். ஆனால், பஸ்கள் திடீரென அரசினர் தோட்டகாவல் நிலையத்தின் முன் நிறுத்தப்பட்டன.

பாதுகாப்புக்கு வந்த போலீஸாரும், உயர் அதிகாரிகளும் ஏதும் பேசாமல் பஸ்களில் இருந்து இற்ங்கிச் சென்றனர்.காவல் நிலையம் முன்பு பஸ்களை நிறுத்தி விட்டு போலீஸார் மாயமானதால் எம்.எல்.ஏக்கள் ஆத்திரமடைந்தனர்.

தங்களை அம்போவென இறக்கி விட்டுச் சென்றது எதிர்க்கட்சித் தலைவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும்அவமதிக்கும் செயல் என்று கொந்தளித்த அவர்கள் அண்ணா சாலைக்கு வந்து மறியிலில் ஈடுபட்டனர். இதனால்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு வந்து போராட்டம் நடத்திய கட்சிகளின் தலைவர்களுக்குசால்வை அணிவித்தார்.

அப்போது இணை ஆணையர் சைலேந்திர பாபுவும், உயர் காவல்துறை அதிகாரிகளும் அங்கு ஓடி வந்தனர்.பாதியிலேயே விட்டு விட்டு காவல்துறையினர் சென்றதற்காக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். பின்னர்காவல்துறையினரின் கெஞ்சலை ஏற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான நாட்களைக் குறைத்ததை பா.ஜ.கவும் குறை கூறியுள்ளது.ஆனால், இன்றைய போராட்டத்தில் அக் கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

வாசன் காட்டம்:

சட்டசபைக் கூட்டத்தை நடத்துவதைவிட தமிழக அரசுக்கு வேறு என்ன முக்கிய வேலை உள்ளது என காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் காட்டமாக கேட்ாார்.

கோட்டை முன் உண்ணாவிரதம் இருந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை வாழ்த்திப் பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய வாசன்,சட்டசபைக் கூட்டத்தை 10 நாட்கள் மட்டுமே நடத்துவது என்ற தமிழக அரசின் முடிவு மிகவும் மட்டமானது.

சட்டசபைக் கூட்டத்தை கூட்டி, மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதை விட தமிழக அரசுக்கும், முதல்வர்ஜெயலலிதாவுக்கும், சபாநாயகருக்கும் வேறு என்ன முக்கியமான வேலை உள்ளது என்பதை மக்களுக்கு அவர்கள் விளக்கவேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+