மதுரை உயர்நீதிமன்ற கிளை நாளை திறப்பு
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை நாளை திறக்கப்படுகிறுறது.
மதுரை உலகனேரியில் ரூ. 55 கோடி மதிப்பில் இந்தக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோட்டி கிளையைத் திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இணை அமைச்சர் வேங்கடபதி, தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதற்கான அழைப்பிதழில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்இல்லை.
இதனால் அவர் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்துவது மத்திய சட்ட அமைச்சகம்என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்துறை இணையமைச்சராக திமுகவின் வேங்கடபதி உள்ள நிலையில்ஜெயலலிதாவின் பெயர் அழைப்பிதழில் விடுபட்டுள்ளது அரசியல்ரீதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் ஏகப்பட்ட எதிர்ப்புகள், குழப்பங்களைத் தாண்டி, மதுரை கிளை திறப்பு தொடர்பான ஏற்பாடுகள்வேகமாக நடந்து வருகின்றன. கிளை வளாகத்தில் பிரமாண்டமான பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நான்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட வழக்குகளின்கோப்புகள் இன்று அதிகாலை மதுரைக்கு வந்து சேர்ந்தன.
சென்னையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 123 ஊழியர்களும் பணியில் சேர்ந்து விட்டனர்.
நாளை திறப்பு விழா நடைபெற்றாலும் திங்கள்கிழமை முதல் வழக்கு விசாரணை தொடங்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை முதலே வழக்குகளைப் பதிவு செய்யலாம் என்று உயர் நீதிமன்ற கிளைபதிவாளர் அறிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications