கடத்தப்பட்ட 9 மாணவ, மாணவிகள் மீட்பு
சென்னை:
சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 9 பள்ளி மாணவ, மாணவியரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை அயனாவரம், குஜ்ஜிபாபு தெருவில் மாநகராட்சிப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்புபடித்து வரும் 4 மாணவர்களும், 5 மாணவிகளும் காணாமல் போயினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, இந்த 9 பேரும்தங்களுடன் படிக்கும் லீலாவதி என்ற மாணவியின் வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லீலாவதியின்தாயார் புஷ்பாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது 9 பேரும் வந்துவிட்டுப் போனது உண்மைதான் என்றும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லைஎன்றும் கூறினார்.
போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தியபோது, 9 பேரையும் புஷ்பாவின் உறவுப் பெண்ணான மலர்விழிஇரண்டு ஆட்டோக்களில் அழைத்துச் சென்றதை பார்த்ததாகக் கூறினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந் நிலையில் நேற்றிரவு கீழ்பாக்கம்கூடைப்பந்து மைதானத்தின் அருகில் 4 குழந்தைகளும், என்.எஸ்.கே. நகரில் 5 குழந்தைகளும் அழுது கொண்டுநிற்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தான் தொலைந்துபோன குழந்தைகள் என்று தெரியவந்தது. இதையடுத்து குழந்கைளை டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குபோலீசார் அழைத்துச் சென்றனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, உடன் படிக்கும் லீலாவதியின் வீட்டுக்கு சும்மா தான் போனோம்.அங்கிருந்து திரும்பி வரும்போது மலர்விழி என்ற பெண்ணும், சண்முகம் என்பவரும் எங்களை சுற்றுலா அழைத்துச்செல்வதாகக் கூறி புதுவைக்கு அழைத்துச் சென்றதாகவும், தங்களது நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும்கூறினர்.
கடத்தல் விவகாரம் பரபரப்பு அடைந்தததால் அச்சமடைந்த மலர்விழியும், சண்முகமும் குழந்தைகளை சென்னைக்குஅழைத்து வந்து இரண்டு ஆட்டோக்களில் ஏற்றி விட்டுத் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications