திருவண்ணாமலையில் சாப்ட்வேர் பார்க்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளசாப்ட்வேர் பார்க் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இதனை துவக்கி வைத்துபேசுகையில்,
உலக சாப்ட்வேர் சந்தையில் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியின் மதிப்பு 1 சதவீதம் தான். வரும்2008ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உலக சாப்ட்வேர் சந்தையில் 2.5 சதவீதமாக இருக்கும்.
2003-2004ம் ஆண்டில் சாப்ட்வேர் ஏற்றுமதியின் அளவு ரூ. 59,550 கோடியாக இருந்தது. இதுநாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 2.64 சதவீதமாகும். ரூபாயின் மதிப்பில் இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் அதிகம். டாலர் மதிப்பில் பார்த்தால் 30 சதவீதம் அதிகம்.
சாப்ட்வேர் ஏற்றுமதி மற்றும் சர்வீசஸ் துறையில் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், காப்பீடுக் கழகங்களுக்கான சாப்ட்வேர்கள் எழுதுவது, அந்தத்துறைகளுக்கான சேவைகள் வழங்குவது, பிபிஓ ஆகிய துறைகளில் நாட்டில் தமிழகம் முக்கியஇடத்தில் உள்ளது.
தமிழகத்தில் சாப்ட்வேர் துறையை சென்னையை மட்டும் மையமாக வைத்து இல்லாமல் மாநிலம்முழுவதுக்கும் பரவச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக கோவை, திருச்சி, மதுரை,திருநெல்வேலி ஆகிய நகர்களிலும் சாப்ட்வேர் பார்க்குகள் உருவாக்கப்படும்.
ஆப்டிகல் பைபர் பிராண்ட் பேண்ட் தொலைத் தொடர்பு வசதிகளும் உருவாக்கித் தரப்படும் என்றார்.
தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி:
இந் நிலையில் சட்டமன்றத்தில் பேசிய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,
கடந்த திமுக ஆட்சியின்போது, 1996-2001ம் கால கட்டத்தில், தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.6,830 கோடியாக இருந்தது. இப்போது எங்கள் ஆட்சியில் அது ரூ. 19,167 கோடியாகஉயர்ந்துள்ளது.
திமுக ஆட்சியில் சாப்ட்வேர் துறையில் 60,000 வேலை வாய்ப்புக்கள் தான் உருவாக்கப்பட்டன.அதிமுக ஆட்சியில் இப்போது 1.66 லட்சம் பேர் இத் துறையில் உள்ளனர் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications