காளிமுத்து மீது ஆளுநரிடம் எதிர்கட்சிகள் புகார்
சென்னை:
சட்டசபையில் பொய்யான தகவல்களைத் தந்து வருவதாக நிதியமைச்சர் பொன்னையன் மீதும், கருணாநிதி மீது கொண்டுவரப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக யாரும் வெளியில் விவாதிக்கவோ, பிரசுரிக்கவோ கூடாது என்று சபாநாயகர்காளிமுத்து விதித்துள்ள தடையை எதிர்த்தும் ஆளுநர் ராம் மோகன் ராவிடம் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக் கட்சிகள் நாளை மனு கொடுக்கவுள்ளன.
மேலும் விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்றும் அவருக்குக்கோரிக்கை விடுக்கவுள்ளன.
இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சட்டசபையில் நிதியமைச்சர் பொன்னையன் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். மேலும், திமுக தலைவர் கருணாநிதிமீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக சட்டசபைக்கு வெளியே கருத்து தெரிவிக்கவோ, பத்திரிகைகளில் எழுதவோ கூடாதுஎன்றும் தன்னிச்சையாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவு குறித்தும் நாளை காலை 11.45 மணிக்கு ஆளுநர் ராம்மோகன் ராவிடம் புகார் கொடுக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொன்னையன் தெரிவித்து தவறான கருத்துக்கள் குறித்தும் புகார் கொடுக்கப்படும்.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்று ஆளுநரை சந்தித்து மனுஅளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்,
தமிழக சட்டமன்றம் அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படவில்லை. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டும்செயல்படவில்லை. இதனால் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட எந்த சட்ட மசோதாவுக்கும் அனுமதி தரக்கூடாது என ஆளுநரிடம் நாளை கோரிக்கை வைப்போம்.
நாளை காங்கிரஸ் திமுக, பா.ம.க., இடதுசாரிக் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ளோம். இந்த அரசைக்கலைக்க கோர மாட்டோம். திருத்தக் கோருவோம்.
சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மக்களைச் சந்திக்க, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications