தலைமை நீதிபதி ரெட்டிக்கு கொலை மிரட்டல்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் மாவட்டங்கள், ரிட் மனு அதிகாரம் ஆகியவற்றை வழங்கியதற்காகசுபாஷன் ரெட்டி மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும், அவரது வழக்குகளை புறக்கணிப்போம் எனவும் பிடிவாதமாக கூறிஉண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மேலும் மதுரை நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந் நிலையில் சுபாஷன் ரெட்டிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. ஜூலை 7ம் தேதி வந்துள்ள இந்தக்கடிதத்தில், 10 நாட்களில் நீங்கள் கொல்லப்படுவீர்கள். உங்களது நாட்கள் எண்ணப்படுகின்றன. முடிந்தால் தமிழககாவல்துறையின் உதவியுடன் உயிர் தப்பிக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடிதத்தின் முடிவில் ஒரு வாகனத்தின் எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக் கடிதத்தை காவல்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ளார் சுபாஷன் ரெட்டி. மேலும், உயர் நீதிமன்ற காவல்நிலையத்தில் இதுதொடர்பாக எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாகன எண், ஒரு யமஹா பைக்கின் எண் எனத்தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications