ஆடிப் பெருக்கு: காவிரியில் பக்தர்கள் நீராடல்
சேலம்:
ஆடிப் பெருக்கை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காவிரியில் புனித நீராடினர்.குறிப்பாக கன்னிப் பெண்களும் புதுமணத் தம்பதிகளும் ஏராளமான அளவில் நீராடி வழிபட்டனர்.
தாலி பாக்கியம் நிலைக்க தம்பதிகள் நீராடி புதுத் தாலி கட்டிக் கொண்டனர். குழந்தை பாக்கியம் கோரிதம்பதிகள் கரையோர அரச மரத்தில் மஞ்சள் நூலைக் கட்டி வழிபட்டனர்.
திருமணமாகாத இளம் பெண்கள் நல்ல வரன் அமைய காவிரித் தாயை வழிபட்டு கைகளில் மஞ்சள்கயிற்றைக் கட்டிக் கொண்டனர்.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும்அதிமானவர்கள் புனித நீராடினர். இந்த தினத்தை முன்னிட்டு மேட்டூரில் இருந்து காவிரியில் நீர்திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு வறண்டு கிடந்த காவிரியால் மக்களால் புனித நீராட முடியவில்லை. இம்முறை கனமழையால் தனது கபினி அணைக்கு ஆபத்து வந்ததால் கர்நாடகம் திறந்து விட்ட நீர் மேட்டூரில்தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் குறுவை சாகுபடிக்கு போதுமானதாக இல்லை என்று கூறி தமிழக அரசு திறக்கவில்லை. இந்நிலையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு நீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் பக்தர்கள் பெரு மகிழ்ச்சியுடன் புனித நீராடினர். நீராடுவதற்காக மேட்டூர் அணைக்கட்டுக்கும், ஒகேனகல் நீர் வீழ்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு காவிரிக் கரையோரங்களில் உள்ள கோவில்களிலும், புனித நீராடும்பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications