தீவிரவாதிகளுடன் பேச்சு தொடர்கிறது
பாக்தாத்:
தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் 3 இந்தியர்களையும் மீட்க பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
முன்னதாக 3 இந்தியர்கள், 3 கென்யர்கள், ஒரு எகிப்தியர் ஆகிய 7 பேரையும தீவிரவாதிகள் விடுதலைசெய்துவிட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந் நிலையில் தீவிரவாதிகள், இந்திய அரசு, குவைத் நிறுவனமான கல்ப் லிங்க் ஆகியோருடன் பேச்சு நடத்தி வந்ததுலாய்மி, பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போவதால், சமரச முயற்சியிலிருந்து விலகிக் கொள்வதாகமிரட்டல் விடுத்தார். இதனால் மத்திய அரசும், கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரும் கலங்கிப்போயிருந்தனர்.
இந் நிலையில் மீண்டும் துலாய்மி பேச்சுவார்த்தைகளைத் துவக்கியுள்ளார். அவரை குவைத் நிறுவனம் தொடர்புகொண்டு பேச்சு நடத்தி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் இன்று நிருபர்களிடம்தெரிவித்தார். துலாய்மியுடனும் குவைத் நிறுவனத்துடன் குவைத் மற்றும் பாக்தாதில் உள்ள இந்தியத் தூதரகங்கள்தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இராக்கில் தனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும், அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட250 பேருக்கு இழப்பீடு வழங்கவும் குவைத் நிறுவனத்தை தீவிரவாதிகள் நிர்பந்தப்படுத்தி வருகின்றனர். அதேபோல இந்தியாவிடம் பணம் எதிர்பார்க்கின்றனர்.
இதில் ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக வந்த முரண்பட்ட தகவல்கள்:
முன்னதாக நேற்றிரவு கடத்தப்பட்ட 3 இந்தியர்கள், 3 கென்யர்கள், ஒரு எகிப்தியர் ஆகிய 7 பேரும் விடுதலைசெய்யப்பட்டதாக சர்வதேச நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.
அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கென்யாவும், குவைத் நிறுவனமும் கூறின. கென்யா வெளியுறவுத்துறை அமைச்சர்சிராவ் பிணைக்கைதிகள் 7 பேரும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை விடுவிக்கப்பட்டார்கள்.இப்போது அவர்கள்பாதுகாப்பான இடத்தில் உள்ளனர். அவர்கள் குவைத்தில் இருக்கும் கென்ய வெளியுறவுத்துறை அதிகாரி யூசுப்ஜிபோவிடம் பிணைக்கைதிகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றார்.
ஆனால், இந்தச் செய்திகளை மத்திய அரசு மறுத்தது. இது தொடர்பாக தங்களுக்குத் தகவல் ஏதும் வரவில்லை எனமத்திய அரசு கூறிவிட்டது. இதையடுத்து கென்யாவும் தனது செய்து தவறானது என்று கூறிவிட்டது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications