பலத்த பாதுகாப்பில் நியூயார்க், நியூஜெர்சி
நியூயார்க்:
அல்கொய்தா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுவதால், நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்சிஆகிய நகர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாரக வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதியம் (International Monetary Fund), உலக வங்கி,நியூஜெர்சியில் உள்ள புரூடென்சியல் நிதி நிறுவனம், நியூயார்க்கில் உள்ள 39 மாடி ஐக்கிய நாடுகள்சபை, சிட்டி குரூப், பங்குச் சந்தை ஆகிய கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றுஅடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று முன் நியூயார்க்கில் மட்டுமே தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டன், நியூஜெர்சியும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உளவுப் பிரிவுகள்எச்சரித்தையடுத்து அங்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று நகர்களிலும் உச்சபட்ச பாதுகாப்பு அமலாக்கப்பட்டுள்ளது. நவம்பரில் நடக்கவுள்ளஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நிச்சயமாக தாக்குதல் நடக்கலாம் என்று அந் நாட்டு உளவுஅமைப்புகள் கருதுகின்றன.
கார், டிரக்குகளில் வெடிகுண்டுகளை நிரம்பிப் கொண்டு கட்டடங்களில் மோதி தாக்குதல் நடக்கலாம்என அவை எச்சரித்துள்ளன.
உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் டாம் ரிட்ஜ் உயர் மட்ட அதிகாரிகளுடனும், மூன்றுநகர்களின் முக்கிய கட்டடங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
மூன்று நகர்களிலும் அநாதையாக நிற்கும் கார்களை உடனே பார்க்கிங் பகுதிகளில் இருந்துவெளியேற்றுவது, கட்டடங்களில் நுழையும் கார்களை முழுமையாக சோதனையிடுவது,அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, பார்சல்களைமுழுமையாக சோதிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்குவந்துள்ளன.
மெக்சிக்கோ வழியாக அரேபியர்கள் அல்லாத பிற நாட்டவரை அமெரிக்காவுக்குள் ஊடுருவவைத்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்த அல் கொய்தா முயன்று வருவதாகத் தெரிகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications