இந்தியாவில் 51 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் !!
கொல்கத்தா:
இந்தியாவில் தற்போது 51 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக மத்திய புள்ளி விவர மற்றும் திட்டஅமலாக்கல் துறை அமைச்சர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் எய்ட்ஸ் குறித்த சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர்பேசியதாவது:
மும்பைதான் இந்தியாவின் எய்ட்ஸ் நுழைவாயிலாக இருக்கிறது. மும்பையிலிருந்தும்,மஹாராஷ்டிராவில்இருந்தும்தான் இந்தியா முழுக்க எய்ட்ஸ் பரவுகிறது. கர்நாடாகவில் அதிக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள்இருப்பது எனது சொந்தத் தொகுதியான மங்களூரில் தான். இங்கு இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர்வேலைக்காக மும்பை சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்போதைக்குபீகாரிலும், உத்தரப்பிரதேசத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத்தோன்றினாலும் வருங்காலத்தில் இது மாறக் கூடும். ஏனெனில் இந்த இரு மாநிலங்களில் எய்ட்ஸ் நோயைக்கண்டறிவதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை.
13வது மக்களவையில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுஅமைக்கப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக மாநில அளவில் சட்டசபை உறுப்பினர்கள்அடங்கிய எய்ட்ஸ்விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக கடுமையாகப் போராடினால்தான், சாதாரண மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு வரும் என்பதாலேயே இத்தகைய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் எய்ட்ஸ்க்கு எதிரான விழிப்புணர்வு திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார் பெர்னாண்டஸ்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications