குழந்தைகளை அள்ளி சென்ற 650 ஆட்டோக்கள்
சென்னை:
சென்னையில் 3 குழந்தைகளுக்கு மேல் ஏற்றிய 650 ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவ,- மாணவிகள் அதிக அளவில் ஆட்டோ மற்றும் ரிக்ஷாக்களில் ஏற்றி செல்லப்படுகிறார்கள்.இதனால் விபத்து ஏற்படும்போது அதிக உயிர்ச் சேதம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் சென்னையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2 நாட்களில்சென்னையில் 650 ஆட்டோ உள்பட 750 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சில பள்ளி வேன்களிலேயே அதிக அளவு மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள்நடைபெறாமல் இருக்க பள்ளி தாளாளர்களிடம் எழுத்துபூர்வமான கையெழுத்து வாங்கி உள்ளோம்.
இதை மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆட்டோவில் 3 குழந்தைகளும்,அவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு பெரிவரும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது சைக்கிள் ரிக்ஷாவுக்கும்பொருந்தும்.
ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாவில் குழந்தையுடன் பெரியவர்கள் யாரும் வராதபோது, ஏதாவது அசம்பாவிதம்ஏற்பட்டால் வாகன ஓட்டிகளே பொறுப்பாவார்கள். அதேபோல் மாணவர்களை வீட்டில் விடும்போது அவர்கள்பத்திரமாக இறங்கிய பின்னரே ஆட்டோ ஓட்டுநர் வண்டியை எடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளைமீறுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications