பாஜகவை நம்ப முடியாது: கருணாநிதி
சென்னை:
இந்துத்வா விஷயத்தில் பாஜகவை நம்பவே முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் தோல்விக்குப் பின் கோவாவில் கூடிய பாஜக தலைவர்களின் கூட்டத்தில், இந்துத்வாவுக்கு உயிர் கொடுக்கமுடிவெடுத்தனர். இதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோரின் கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். தெலுங்கு தேசமும் எதிர்த்தது.
இதனால், குலை நடுங்கிப் போன பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி கலைந்து போகாமல் தடுக்க இந்துத்வாவைகை கழுவுவதாகக் கூறியுள்ளது.
இந்துத்வாவை கைவிடுவதாக பாஜக சொல்லும்போதெல்லாம், அக் கட்சியின் முன்னணி தலைவர்களானவெங்கையா நாயுடு போன்றவர்கள், தேவைப்படும் போது இந்துத்வா முழக்கம் செய்யத் தவற மாட்டோம் என்றுசொல்லத் தவறியதில்லை. இந்துத்வாவுக்கு புதிய விளக்கம் அளிக்கவும் தவறுவதில்லை.
இந்துத்வாவை பாஜக கைவிடாது என்று கடந்த ஜூன் மாதம் பேட்டியளித்த வெங்கையா நாயுடு நேற்று அளித்தபேட்டிக்கு பத்திரிக்கைகள் கொடுத்த தலைப்பே "இந்துத்வாவை கை கழுவுகிறது பாஜக என்பதுதான்.
புகை பிடித்தால் புற்றுநோய் வரும் என்று எச்சரிக்கும்போதெல்லாம் ஒருவன் நான் புகைப்பதை விட்டுவிட்டேன்என்றான். எப்படி அது உனக்குச் சாத்யமாயிற்று? என்று கேட்டால், புகை பிடிப்பதை நான் பலமுறை கைவிட்டிருக்கிறேன். அதனால் இது ஒன்றும் பிரமாதமில்லை என்றான். பாஜக இந்துத்வா பிரசாரத்தைவிட்டுவிட்டோம் என்று கூறுவதும் இதுபோலத்தான்.
1999ல் இந்துத்வா இல்லை என்றார்கள். நேற்று உண்டு என்றனர். இன்று தலை நீட்டிப் பார்க்கின்றனர். நிலைப்படிஇடித்ததும் தலையைக் குனிந்து கொள்வது போல குனிந்து கொள்கின்றனர். இவர்களை நம்ப முடியாது. மீண்டும்தலையை நீட்டுவார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications