மறுமலர்ச்சி பயணம்: நெல்லையில் தொடங்கினார் வைகோ
திருநெல்வேலி:
மறுமலர்ச்சி பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள 45 நாள் நடை பயணத்தை திருநெல்வேலியில் இன்று காலைதொடங்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
நெல்லையிலிருந்து சென்னை வரையிலான இந்த நடைப் பயணத்தில் வைகோவுடன் 3,000 மதிமுகதொண்டர்களும் கலந்து கொள்கின்றனர். சுமார் 1,025 கிலோமீட்டர் தொலைவுக்கு நடக்கவுள்ள வைகோ,அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி சென்னைத் தீவுத் திடலில் தனது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.
புதன்கிழமை சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்று தாயார் மாரியம்மாளிடம் ஆசிபெற்ற வைகோ பின்னர்நெல்லை சென்றார். அங்கு கட்சிப் பிரமுகர்களுடன் பயணம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்நடைப்பயணத்தில் பங்கேற்கவுள்ள தொண்டர்களுக்கு கைப்பை, சீருடைகள், தொப்பி, செருப்பு உள்ளிட்டவைவழங்கப்பட்டன.
இன்று காலை 8 மணிக்கு நெல்லை டவுன் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.பின்னர் சீருடை அணிந்த தொண்டர்கள் புடை சூழ தனது நடைப் பயணத்தை தொடங்கினார்.
வைகோவின் நடைப்பயணம் வெற்றி பெற பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications