போராட்டத்தை வாபஸ் பெற வழக்கறிஞர்கள் மறுப்பு
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை வாபஸ் பெறும் வரை தங்களது போராட்டத்தைவிலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
நீதிமன்றப் புறக்கணிப்பு செய்யக் கூடாது, நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசவோ, புகார் கூறவோ கூடாது,நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்பது உள்ளிட்ட 25 புதிய கட்டுப்பாடுகளை விதித்துதமிழ்நாடு வழக்கறிஞர் சட்டத்தில் உயர்நீதிமன்றம் சமீபத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்தது.
இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியுடன் நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது. இதையடுத்துபுதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆராய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும்,அந்தக் குழுவின் முடிவு வரும் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகவும் தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி அறிவித்தார்.
அவரது அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதன்பின்னர் சங்கத் தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய கட்டுப்பாடுகளை தற்காலிகமாகநிறுத்தி வைப்பதாகத்தான் அறிவித்துள்ளனர்.
ஆனால் புதிய சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றுபிரபாகரன் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications