விபசாரத்திற்குத் தாவிய தமிழ் ஆசிரியர்!
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் ஒருவர், தனது வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை புறநகரான குரோம்பேட்டை 9வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் அருள்தாஸ். எம்.ஏ.பட்டதாரியான இவர் பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரும், இவரது மனைவியும் பிரிந்து வசிக்கின்றனர். ஆசிரியர் பணி மூலம் கிடைத்த வருவாய் போதாததால்நிறைய கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தவித்து வந்தார்.
இந் நிலையில் தனது நண்பர்களின் ஆலோசனைப்படி பெண்களை வைத்து விபசாரத் தொழிலில் இறங்கினார்.அருள்தாஸின் வீட்டுக்கு தினசரி இரவு பல பெண்கள் வந்து செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம்விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களை தனது உறவுப் பெண்கள் என்று அருள்தாஸ் சொல்லி சமாளித்துள்ளார்.
இந் நிலையில் மஞ்சு என்ற விபசாரப் பெண்ணை மாறு வேடத்தில் அணுகிய குரோம்பேட்டை போலீஸார் அவர்அழைத்துச் சென்ற வீட்டுக்குச் சென்றனர். அது அருள்தாஸின் வீடு. அதிர்ந்து போன போலீஸார் அங்கு அதிரடிசோதனை நடத்தியபோது, மஞ்சு தவிர ரேவதி என்ற பெண்ணும் விபசாரத்திற்காக தயாராக இருந்தார்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் ஆசிரியர் அருள்தாஸையும் கைது செய்தனர். தான் ரூ.50,000 அளவுக்கு கந்து வட்டி வாங்கியிருப்பதாகவும், இதனை அடைக்கவே நண்பர்களின் ஆலோசனைப்படிவிபசாரத் தொழிலில் இறங்கியதாக போலீஸாரிடம் கூறி அழுதார் அருள்தாஸ்.
கடந்த 6 மாதங்களாக விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கும் அருள்தாஸ், அப்பகுதியில் பிரபலமான நபராகவிளங்கியுள்ளார். குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து வரும் போலீஸார், அருள்தாஸின் வீட்டில்வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில்தான் தினசரி இரவு கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications