Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயர்நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள்ரகளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விசாரணை நடந்து கொண்டிருந்த நீதிமன்ற அறை முன்பு வந்து கதவுகளைத் தட்டி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்ரகளை செய்ததால் கோபமடைந்த நீதிபதி வழக்கறிஞர்களை கைது செய்யப் போவதாக கூறி எச்சரித்தார்.

வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள 25 புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்தப் போராட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவழக்கறிஞர்கள் திடீரென்று பணிக்குத் திரும்பினர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்களைப் பணிக்கு போக வேண்டாம் என்று கூறி தடுத்தனர்.

இருப்பினும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் புறக்கணித்து விட்டு நீதிமன்றங்களில்வழக்கு விசாரணைகளில் ஆஜராகினர். இதனால் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிமன்றங்களும் பிரச்சினையின்றிசெயல்படத் தொடங்கின.

இதையடுத்து பிரபாகரன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்ஒவ்வொரு நீதிமன்றமாக சென்று வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

நீதிபதி பி.டி.தினகரன் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நீதிமன்ற அறைக்கு வந்த அவர்கள் கதவுகளை பலமாகதட்டி விசாரணையை நடத்தக் கூடாது என்று கோஷமிட்டனர். மேலும், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்குஎதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

வழக்கறிஞர்களின் செயலால் ஆத்திரமடைந்த நீதிபதி தினகரன், உடனடியாக கிரிமினல் குற்றச் சட்டம் பிரிவு482ன் கீழ் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.உடனடியாக மாநகர காவல்துறை ஆணையர் வருமாறும் உத்தரவிட்டார். மேலும், வழக்கறிஞர் சங்கத் தலைவர்பிரபாகரனையும் உடனடியாக அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த பிரபாகரன், வழக்கறிஞர்களின் செயலுக்காக மன்னிப்புகேட்டார். ஆணையரை அழைத்து வரும் உத்தரவை ரத்து செய்யுமாறும், இனிமேல் இதுபோல நடக்காது என்றும்நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பிரபாகரனின் உறுதிமொழியை ஏற்ற நீதிபதி தினகரன், வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர்கள் தடை ஏற்படுத்தக்கூடாது, எந்த வழக்கறிஞரையும் பணி செய்ய விடாமல் தடுக்கக் கூடாது என்று பிரபாகரனுக்கு உத்தரவிட்டு,பின்னர் தான் பிறப்பித்த உத்தரவுகளையும் வாபஸ் பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+