கொலை வழக்கு: அழகிரி மீது குற்றச்சாட்டு பதிவு
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் த.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி மீது இன்று நீதிமன்றத்தில்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அழகிரி தவிர 12 பேர் மீதும் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து இந்த கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்கவுள்ளது.
மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜபருல்லா கான் இந்தக்குற்றச்சாட்டுகளை இன்று பதிவு செய்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் 5 பிரிவுகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு மே 20ம் தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டின் அருகே வாக்கிங்சென்று கொண்டிருந்த த.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுக உட்கட்சித்தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் கொல்லப்பட்டதாகவும், கொலைக்குக் காரணமேஅழகிரி தான் என்றும் கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்தக்கொலை தொடர்பாக அழகிரியின் வீடியோ கடைகளில் ரெய்டும் நடந்து அனுமதியில்லாதவிசிடிகள் வைத்திருந்ததாக தனி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதால், அழகிரிஉள்ளிட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். நீதிபதி குற்றங்களைப் பதிவு செய்தபோது,கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என 13 பேரும் மறுத்தனர்.
தங்கள் மீது அரசு பொய் வழக்குப் போட்டிருப்பதாக புகார் கூறினர். ஆனாலும் குற்றச்சாட்டுகளைபதிவு செய்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications