அரசு பணம் ஜெ. வீணடிப்பு: கருணாநிதி புகார்
சென்னை:
தமிழகத்தின் நிதி நிலையை மோசமாக இருப்பதாகக் கூறிய ஆடிட்டர் ஜெனரலுக்கு பதில் தரும்வகையில் லட்சக்கணக்கான அரசுப் பணத்தை செலவழித்து பத்திரிக்கைகளில் முழு பக்கவிளம்பரங்கள் கொடுத்து, மக்கள் பணத்தை முதல்வர் ஜெயலலிதா வீணடித்துள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக நிதி நிலை குறித்து ஆட்டிடர் ஜெனரலின் கருத்துக்களுக்கு பாயிண்ட்-பை- பாயிண்டாகவிளக்கம் தந்தும் சில பத்திரிக்கைகள் தவிர மற்றவற்றில் முழு பக்க விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன.முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் இந்த விளம்பரம் தரப்பட்டுள்ளது.
இது குறித்து கருணாநிதி கூறியிருப்பதாவது:
அடுத்த வீட்டுக்காரன் பொருளை எடுத்து, இன்னொரு வீட்டுக்காரனுக்குத் தருவது போல, தன்அரசுக்கு எதிராக ஆடிட்டர் ஜெனரல் புள்ளி விவரங்களுடன் எடுத்து வைத்த உண்மைகளைமறைக்கும் விதமாக, பத்திரிக்கைகளில் அரசின் செலவில் முழு பக்க விளம்பரம் தந்துள்ளார்ஜெயலலிதா.
இதற்காக அரசுப் பணம் ஏராளமான அளவில் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் ஜெனரல் தவறானதகவல் தந்திருந்தால் அதை எத்தனையோ வழிகளில் மறுத்திருக்கலாம். தனது துறைகள் மூலமாகஅரசு விளக்க அறிக்கைகள் வெளியிட்டிருக்கலாம்.
அதை விட்டுவிட்டு அரசு பணத்தையே செலவழித்து அரசுக்கு எதிரான தகவல்களை மறைத்துள்ளார்ஜெயலலிதா.
புதிய வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் தான் சென்னை காப்பாற்றப்பட்டது என்று காதில் பூசுற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அந்த ஏரியில் ஒரு சொட்டு நீர் இல்லை. அதிலிருந்து எப்படி தண்ணீர்வர முடியும்.
நெய்வேலியைச் சுற்றி 45 போர்வெல்களைப் போட்டு அதிலிருந்து நீரை லாரிகளில் ஏற்றிக்கொண்டுவந்துவிட்டு, வீராணத்தில் இருந்து தண்ணீர் வருவதாகக் கூறியிருக்கிறார்.
புதிய வீராணம் திட்டத்துக்கு செலவிடப்பட்ட பணம் அத்தனையும் வீணாகியுள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications