மிரட்டல்: இலங்கையில் அமெரிக்க தூதரகம் மூடல்
கொழும்பு:
மிரட்டல் காரணமாக கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மூடப்பட்டது.
இது குறித்து தூதரக செய்தித் தொடர்பாளர் கிறிஸ் லாங்க் கூறுகையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக்காரணங்களுக்காக தூதரகம் மூடப்படுகிறது. இப்போது இதை மட்டும்தான் கூற முடியும் என்றார்.
எந்தவிதமான மிரட்டல் வந்தது என்பது குறித்தும், தூதரகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் பதிலளிக்கமறுத்து விட்டார்.
இதற்கிடையே, இன்று காலை தூதரகத்திற்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபெளடர் இருந்ததாகவும், அது ஆந்த்ராக்ஸ் வகை கிருமி அடங்கியதாக இருக்கலாம் என்ற பயத்திலேயே தூதரகம்மூடப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
இந் நிலையில், தூதரக அதிகாரிகளிடம் இருந்து விவரத்தை எதிர்பார்ப்பதாகவும், அதன் பின்னரே எங்களதுவிசாரணையைத் தொடங்க முடியும் என்றும் இலங்கைப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications