சதாமுக்காக வாதாட சென்னை வழக்கறிஞர்
சென்னை:
இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்காக சென்னையைச் சேர்ந்த பிரபல மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்பக்தவச்சலம் ஆஜராகி வாதாடவுள்ளார்.
இராக் அதிபர் சதாம் உசேன் அமெரிக்க படையினரால் பிடிக்கப்பட்டு தற்போது இராக் இடைக்கால நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மனித குலத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், பல்வேறு இனப்படுகொலைகளை செய்ததாகவும், போர்க் குற்றம் புரிந்ததாகவும் அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் சதாம்உசேனுக்காக வாதாட சர்வதேச அளவில் புகழ் பெற்ற வழக்கறிஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்னெஸ்டி சர்வதேச அமைப்பும், சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர்கள்குழுவும் சேர்ந்து சதாமுக்காக வாாதட உள்ளன.
இந்தக் குழுவில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பக்தவச்சலம் இடம் பெற்றுள்ளார். இவர் 1993ம் ஆண்டுசென்னையில் நடந்த வெடிகுண்டு வழக்கு, விடுதலைப் புலிகள் மீதான வழக்கு ஆகியவற்றில் ஆஜரானவர்.நக்ஸலைட்டுகளுக்கான சில வழக்குகளிலும் இவர் ஆஜராகியுள்ளார்.
சதாம் உசேனுக்காக ஆஜராவதில் பெருமைப்படுவதாக பக்தவச்சலம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்தெரிவிக்கையில், ஆம்னெஸ்டி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர்நிரஞ்சன் ஹால்தார் மூலம் எனக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
எனது மகளான வழக்கறிஞர் அஜிதாவின் உதவியுடன் சதாம் வழக்கை நான் மேற்கொள்ளவுள்ளேன். விரைவில்சர்வதேச வழக்கறிஞர்கள் குழு கூடி பணிகள் குறித்து முடிவு செய்யவுள்ளது.
அமெரிக்காவின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை வெட்ட வெளிச்சமாக்குவதில் நான் மிகவும் ஆர்வமாகஉள்ளேன். உண்மையில் இராக்குக்கு பேரழிவு ஆயுதங்களை வழங்கியதே அமெரிக்காதான். ஈரானுக்குஎதிராகவும், குர்திஷ் இன மக்களுக்கு எதிராகவும் இராக் போரிடுவதற்காக பேரழிவு ஆயுதங்களைஅமெரிக்காதான் வழங்கியது. இதுதான் உண்மை.
சதாமுக்காக வாதாடப் போவதால் எனக்கு கொலை மிரட்டல்கள் கூட வரலாம். இருப்பினும் இதற்காக நான்அஞ்சப் போவதில்லை என்றார் பக்தவச்சலம்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications