இராக்கில் லண்டன் நிருபர் கடத்தல்
லண்டன்:
இராக்கில் செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சண்டே டெலிகிராப் பத்திரிக்கையின் நிருபர்தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். நஜாப் நகரில் இருந்து அமெரிக்கப் படைகள் 24 மணிநேரத்தில் வெளியேறாவிட்டால், அவரை சுட்டுக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளனர்.
ஜேம்ஸ் பிராண்டன் (23) என்ற அந்த நிருபரை பாஸ்ரா நகரில், அவர் தங்கியிருந்த ஹோட்டலில்அதிரடியாகப் புகுந்து தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். நேற்று போலீஸ் உடையில் வந்த 30தீவிரவாதிகள் அவரை ஹோட்டலில் இருந்து கடத்திச் சென்றனர்.
அப்போது அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற ஜேம்ஸை நோக்கி அவர்கள் சுட்டனர். இதில் அவரதுகால்களில் குண்டு பாய்ந்தாகத் தெரிகிறது. இதையடுத்து மண்டையில் கடுமையாகத் தாக்கி அவரைதீவிரவாதிகள் இழுத்துச் சென்றுள்ளனர்.
இன்று அவரது வீடியோவையும் தீவிவராதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் பேசும் ஜேம்ஸ், நான்லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் என்று தன்னை அடையாளம் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து முகமூடி அணிந்த தீவிரவாதி பேசுகிறான். அவன் கூறுகையில், நாங்கள்இராக்கிய மண்ணின் மைந்தர்கள். எங்களது புனித நகரான நஜாபை அமெரிக்கப் படைகள்ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்தே ஜேம்ஸ் கடத்தப்பட்டுள்ளார்.
24 மணி நேரத்தில் அமெரிக்கப் படைகள் இங்கிருந்து வெளியேறாவிட்டால், ஜேம்ஸ் உயிருடன்இருக்க மாட்டார் என்கிறான்.
முதலில் இது குறித்து வெளியில் செய்தியே வெளியிடாமல் அமைதியாக இருந்தது இங்கிலாந்துஅரசு இன்று வீடியோ வெளியான பின்னரே கடத்தலை ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில்கடத்தப்பட்டவரின் விவரங்களைச் சொல்ல மறுத்தது.
வீடியோவை வைத்துத் தான் ஜேம்ஸ் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இந்தியர்கள் கதி?:
இதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 3 இந்தியர்களை விடுவிப்பதில்பேச்சுவார்த்தைகள் இழுத்துக் கொண்டே போய்க் கொண்டுள்ளன.
இந் நிலையில் கடத்தப்பட்டவர்களில் ஒருவரான அந்தர்யாமியின் தந்தை சாகும்வரைஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications