காஞ்சிபுரம்: சாலை விபத்தில் குடும்பமே பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
சென்னையிலிருந்து டெம்போ வேன் ஒன்று பாண்டிச்சேரி நோக்கி போய்க் கொண்டிருந்தது. வேன், காஞ்சிபுரம்மாவட்டம் வெங்கம்பாக்கம் அருகே சென்றபோது எதிரே வந்த டாடா குவாலிஸ் காருடன் மோதியது.
இந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன், அவரது மனைவி தனலட்சுமி, மாமியார் ராதா பாய்,உறவினர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். இன்னொரு உறவினரான மீனா பாய்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்தில் 6 பேர் காயமடைந்து செங்கல்பட்டு மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications