கூச்சல், குழப்பம்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:
அந்தமான் சிறையில் செதுக்கப்பட்டுள்ள வீர சாவர்க்கரின் இந்துத்துவக் கருத்துக்களை நீக்கிவிடுமாறு மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் சிவசேனை, பா.ஜ.க. எம்பிக்கள் பிரச்சனை எழுப்பினர்.
மணிசங்கர அய்யர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டு அவர்கள் கூச்சலிட்டனர். இதற்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து சத்தமிட்டனர். இதனால் இரு அவைகளின்நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப் போயின.
இன்று அவைகள் கூடியதும், போர்ட் பிளேர் சிறையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கல்லில் விநாயக்தாமேதர் சவர்க்கரின் கருத்துக்களை அழிக்க பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர்உத்தரவிட்டுள்ளார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சி உறுப்பினர்கள் கோஷம்எழுப்பினர்.
கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று சிவசேனா உறுப்பினர்ஆனந்த் கீதே வலியுறுத்தினர். இதற்கு இன்று சபாநாயகர் பொறுப்பு வகிக்கும் துணை சபாநாயகர் சரண்ஜித் சிங்அத்வால் அனுமதி அளிக்கவில்லை.
இதனையடுத்து சிவசேனா உறுப்பினர்கள் மணிசங்கர் அய்யருக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும்கோஷம் எழுப்பினர். இதையடுத்து மக்களவையை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அத்வால் அறிவித்தார்.
அதே போல ராஜ்யசபாவிலும் இந்த விவகாரம் வெடித்ததால் அவை 40 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications