தமிழுக்காக கைகோர்த்த ராமதாஸ்-திருமாவளவன்
சென்னை:
தமிழுக்காக நாங்கள் இணைந்து பாடுபடுவோம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும்,விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் அறிவித்துள்ளனர்.
இன்று சென்னையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கக் கருத்தரங்கு நடந்தது. தி.நகர் தியாகராயர் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில்பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியல்ரீதியில் எதிரெதிர் முகாமில் இருக்கும் இருவரும் வழக்கத்துக்கு மாறாக இன்று நெடுமாறன்முன்னிலையில் ஒருவருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.அப்போது கூட்டத்தின் எழுப்பிய கரவொலி அடங்க நெடுநேராமானது.
இரு கட்சிகளின் தொண்டர்களும் கூட மகிழ்ச்சியுடன் கூடிப் பேசியதைக் காண முடிந்தது.
நிகழ்ச்சியில் இயக்குர் தங்கர்பச்சான், கவிஞர் அறிவுமதி, தமிழன்பன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர் டாக்டர் சேதுராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில்,
நான் அரசியலைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு தமிழுக்காக இந்தக் கருத்தரங்குக்கு வந்தேன.தமிழர்கள் என்ற ஒரே ஒரு உணர்வால் நாங்கள் இங்கு ஒன்றாய் கூடியிருக்கிறோம். இந்த உணர்வுஉள்ளவரை எங்களை யாரும் பிரித்திட முடியாது.
அரசியல் என்னையும் தம்பி திருமாவளவனையும் பிரித்திருக்கலாம், நாங்கள் தமிழ் அன்னையின்புதல்வர்கள். திருமாவளவன் என்னை எத்தனையோ முறை விமர்சித்திருக்கிறார். நான் பதிலுக்குவிமர்சனம் செய்ததே இல்லை.
காரணம் அவர் மீதான அன்பு தான். திருமாவளவனின் விமர்சனத்தை நான் எப்போதும் பெரிதாகஎடுத்துக் கொள்வதில்லை. எங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் என்றுவந்தால், நாங்கள் இணைவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.
திருமாவளவன் பேச்சு:
பின்னர் திருமாவளவன் பேசுகையில்,
மேடை விளம்பரத்துக்காகவே, அரசியல் லாபத்துக்காகவே நாங்கள் இன்று ஒன்று சேரவில்லை.தமிழ் மொழிக்காகவே சேர்ந்திருக்கிறோம்.
எனக்கும் டாக்டருக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், அரசியல் வேறு,மொழி வேறு. தமிழ் சமூகத்துக்காக, தமிழர்களுக்காக ஒன்றாய் சேர நாங்கள் தயங்கவே மாட்டோம்.தமிழுக்கான எங்களது கூட்டணி நீடிக்கும் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications