அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டாம்: திமுக

Subscribe to Oneindia Tamil

சேலம்:

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைக் கலைக்க வேண்டும், சட்டமன்றத்தை முடக்க வேண்டும் எனநேற்று சேலம் மாநாட்டில் முன்னணி திமுக தலைவர்கள் பேசிய நிலையில், இன்று அக் கட்சிநிறைவேற்றிய தீர்மானத்தில் அதிமுக ஆட்சியை 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தீர்மானங்கள்:

மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்முக்கியமானவை விவரம்:

ஜனநாயகத்தை அதிமுக ஆட்சி கேலிக் கூத்தாக்கி வருவது உண்மை தான் என்றாலும், ஆட்சிக்கலைப்பு என்ற அஸ்திரத்தை பயன்படுத்துவதை திமுக ஆதரிக்கவில்லை. ஆட்சி மாற்றம் என்பதுஜனநாயகரீதியில் மக்களால் தேர்தல் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும் என திமுக விரும்புகிறது.

பொடாவை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். சென்னையில் கடல்நீரைக்குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழுக்கு செம்மொழிஅந்தஸ்து தரும் அறிவிப்பை வரவேற்கிறோம், அது தொடர்பான ஆணையை விரைவில் வெளியிடவேண்டும்,

தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும், முஸ்லீம்கள், கிருஸ்துவர்களுக்கு மாநில அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை கல்வி நிலையங்களிலும் அமலாக்கவேண்டும்,

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் நீத்த பிஞ்சு குழந்தைகளுக்கு இரங்கலையும், அவர்களதுபெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது,

பி.எப். மீதான வட்டிக் குறைப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர்கள்உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்,

நதி நீர் இணைப்புப் பணிகளை உடனே தொடங்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை உடனேதொடங்கிட வேண்டும்,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாகும் உரிமையை வழங்கும் வகையில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும், நாடு முழுவதும் சமத்துவ புரத்தை உருவாக்க வேண்டும்,

தென் மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளையைஅமைக்க வேண்டும்,

மக்களிடம் இந்துத்துவத்தை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதனைஎதிர்ப்பது திமுக தனது கடமையாகக் கருதுகிறது.

ஸ்டாலினே அடுத்த தலைவர்:

மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் பேசியதாவது:

ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு விஷயத்தை அவர்கள் பெற்ற பேறாகக் கூறுவார்கள். எனக்குகருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு மிகப் பெரும் பேறாக நினைத்து மகிழ்கிறேன். அந்த நட்பு எப்படிஉருவானது என்று தெரியாது. ஆனால், அது ஒருபோதும் பிரியாது.

1938ம் ஆண்டு முதல் மாநாடுகளில் பேசி வருகிறேன். 82 வயதில் இந்த மாநாட்டில் பேசுகிறேன்.ஒருவேளை இதுவை எனக்கு கடைசி மாநாடாகக் கூட இருக்கலாம். திமுக ஒரு மாபெரும்தொண்டர்-மக்கள் இயக்கம்.

இங்கே பதவி என்பது சால்வை போன்றது. கட்சி தான் சட்டை, கொள்கை தான் வேட்டி. எனக்கு 82வயது, கருணாநிதிக்கு 81 வயதாகிறது. எங்களுக்குப் பின்னால் நாங்கள் என்று ஒருவரைஅடையாளம் காட்ட வேண்டும் அல்லவா?

எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் ஸ்டாலின் தான் அடுத்த திமுக தலைவர்கள் என்றார்கள்.அது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டை பார்த்துக்கொள்வதற்காக பாதுகாப்புக்கு இருக்கிறவர், நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கைக்கு உரியவராக ஸ்டாலின் தான் இருக்கிறார்.

நாம் திராவிடர்கள் என்ற உணர்வை நினைவூட்டத் தான் திமுக உருவானது. திராவிட குடும்பத்தைபெரியார், அண்ணாவுக்குப் பின் கட்டிக் காத்தவர் கருணாநிதி. தமிழில் எத்தனை விஷயங்கள்உள்ளதோ அத்தனையையும் அறிந்தவர் கருணாநிதி என்றார் அன்பழகன்.

இன்றிரவு திமுக தலைவர் கருணாநிதி மாநாட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+