வி.சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கொலை
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் வெட்டிக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தக் கொலையைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏவின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இங்கு பாலாற்றுப் பகுதியில் பலரும் ஆற்று மணலைத் திருடி விற்று வருகின்றனர். ஆற்றோரம்தோட்டம் வைத்திருக்கும் காளி (32) என்பவரும் திருட்டு மணல் வியாபாராத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந் நிலையில் சுரேஷ் என்பவரும் அதே பகுதியில் மணல் திருடி லாரிகளில் ஏற்றிச் சென்று விற்றுவந்தார். மணலைக் கொள்ளையடிப்பது தொடர்பாக காளிக்கும் சுரேசுக்கும் இடையே தகராறு இருந்துவந்துள்ளது.
இதில் காளிக்கு திருப்போரூர் அதிமுக எம்.எல்.ஏ. கனிதா சம்பத்தின் ஆதரவு இருந்துள்ளது. அவரதுஉதவியுடன் தான் காளி ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் காளி மீது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்கோடீஸ்வரனிடம் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காளியைச் சந்தித்துகோட்டீஸ்வரன் மிரட்டியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் காளியின் ஆட்கள், கோட்டீஸ்வரனையும் சுரேஷையும் மிகபயங்கரமான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கோட்டீஸ்வரன் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். காளி மற்றும் அவரது சகோதரரின் வீடுகள் தாக்குதலுக்குஉள்ளாயின. அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டன. மேலும் பல வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. கனிதா சம்பத்தின் காரையும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தீ வைத்துகொளுத்தினர்.
இப்போது தலைமறைவாகிவிட்ட காளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications