அடுத்த ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் என மத்தியநீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர அய்யரும் பிரியரஞ்சனும் தமிழக காவிரிப்பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது தமிழக விவசாயிகளின் நிலை குறித்துஅய்யர் அவரிடம் விளக்கினார்.
இதன் பின்னர் சென்னை திரும்பிய பிரியரஞ்சன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் மிக மிக மோசமாக உள்ளது. காவிரியில் கடந்த 3மாதங்களில் தமிழகத்துக்கு 137 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,மிகக் குறைவான நீர் தான் வந்துள்ளது.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பு முறையாகஅமல்படுத்தப்படவில்லை. 13 ஆண்டுகளாக தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. இந்தமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடுத்த ஆண்டு வெளி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த முடியாததையே படிப்பினையாகக் கொண்டு, இறுதித் தீர்ப்பைநிச்சயமாக அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்போம். அதில் கவனமாகவும்இருப்போம். இதற்கான புதிய வரைமுறைகளை நீர்ப்பாசனத்துறை வகுக்கும்.
அடுத்த மாதம் 22ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு டெல்லியில் கூடுகிறது என்றார் பிரியரஞ்சன்.
மணிசங்கர் அய்யர் கூறுகையில், கடந்த 13 வருடமாக எந்த நீர்ப்பாசன அமைச்சரும் தமிழகத்துக்குவந்து விவசாயிகள் பிரச்சனையை நேரில் கேட்டறியவில்லை. எனது வேண்டுகோளை ஏற்றுகாவிரி டெல்டாவுக்கு நேரில் வந்து நிலைமையை கண்டறிந்தார் முன்ஷி.
தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழு அடுத்த மாதம் 22ம் தேதி தமிழகம் வரவுள்ளது என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications