கருணாநிதிக்கு எதிராக பாஜக போராட்டம்: ராஜா
டெல்லி:
ஊருக்கு உபதேசம் செய்வதை திமுக தலைவர் கருணாநிதி கைவிட வேண்டும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
தினந்தோறும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் பா.ஜ.க. முடக்கிவருவதாகவும், அதைக் கண்டித்து பா.ஜ.கவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என கருணாநிதிகூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
திமுக தலைவர் கருணாநிதி ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்திவிட்டு சேப்பாக்கம் தொகுதியில் அவருக்குவாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுத்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
சட்டமன்றத்துக்குச் சென்று கடமையை ஆற்றாத கருணாநிதி, நாடாளுமன்றத்தைப் பற்றி பேசக் கூடாது.சட்டமன்றத்துக்கே போகாத கருணாநிதிக்கு, பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்த தகுதி இல்லை.
பாஜகவுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தினால், நாங்கள் பதிலுக்கு கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாநிலம் தழுவிய போராட்டம்நடத்துவோம்.
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியும் வேலையை கருணாநிதி கைவிட வேண்டும்.
ஹூப்ளியில் பொது மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றியதற்காக உமா பாரதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கத்தூண்டியிருக்கிறார் சோனியா காந்தி. சோனியவையும அவரது ஆட்களையும அரசியல் களத்தில் இருந்துஅப்புறப்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார் ராஜா.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications