வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதிகள் வாபஸ்
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட நடத்தை விதிகளை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆனாலும் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் இன்றும் போராட்டம் நடத்தினர்.
சுபாஷன் ரெட்டியை மாற்ற வேண்டும், நடத்தை விதிகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன்சென்னை வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதியை சந்தித்துக்கோரிக்கை வைத்தனர்.
மூத்த வழக்கறிஞர் சாந்திபூஷன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அவரைச் சந்தித்தனர். அப்பேது 2 நாட்களில்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக தலைமை நீதிபதி உறுதியளித்தார்.
இந நிலையில் வழக்கறிஞர்களுக்கு தான் விதித்த 24 நடத்தை விதிகளை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் வழக்கறிஞர்கள் போராட்டம் இன்றுடன் முடிவுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அதிகார வரம்புகள், மாவட்ட ஒதுக்கீடு ஆகியவற்றை முன் வைத்து சென்னைநீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நீதிமன்றத்துக்குள்ளேயே அடிதடி, ஊர்வலம், தலைமை நீதிபதியின் கொடும்பாவி எரிப்பு, உண்ணாவிரதம் போன்றசம்பவங்கள் நடந்தன. மேலும் தலைமை நீதிபதியை மாற்ற வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரினர்.
இதையடுத்து வழக்கறிஞர்களுக்கு 25 நடத்தை விதிமுறைகளை சுபாஷன் ரெட்டி அறிவித்தார். இதற்கான சட்டத்திருத்தமும் தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து போராட்டம தீவிரமடைந்தது. இதனால் உயர் நீதிமன்றப் பணிகள் தொடர்ந்து ஸ்தம்பித்து வந்தன.இந் நிலையில் வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட நடத்தை விதிகளை வாபஸ் பெறுவதாக தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதை ஏற்று வழக்கறிஞர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்துஇன்று பார் கவுன்சில் கூடி விவாதிக்கவுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவை வைத்து போராட்டம் தொடருமாவாபஸ் பெறப்படுமா என்பது தெரியவரும்.
வழக்கறிஞர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்யவேண்டியது என்பதாகும்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை விடுவிக்கும் வரை போராட்டம் நடக்கும் என்றும், தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி மீது சென்னை வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அது குறித்துவிசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்துள்ளதாகவும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான என்.ஜி.ஆர். பிரசாத் கூறியுள்ளார்.
அவரது தலைமையில் இன்றும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.
இதற்கிடையே பேராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்டோர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications