பி.இ. மாணவர்களுக்கு கேம்ப்ரிட்ஜ் ஆங்கில கல்வி
சென்னை:
தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத் திறனை அதிகரிக்க, இங்கிலாந்தின்கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக ஆங்கில சான்றிதழ் பட்டயப் படிப்பு தமிழக பொறியியல் கல்லூரிகளில்அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக தொழில்நுட்பக்கல்வித்துறை இயக்குனர் பிரபாகர், பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் பண்ணாட்டுத் துறைச் செயலாளர் யூனிஸ் குரூக்ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது தென் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் ஸ்டூவர்ட் இன்னாசும் உடனிருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழக மாணவர்கள் தொழில்நுட்பத் திறனிலும், கல்வியிலும் மிகச் சிறந்து விளங்கினாலும் ஆங்கிலத்தில்சரளமாகப் பேசும் விஷயத்திலும், தன்னம்பிக்கையிலும் இன்னும் பின் தங்கியே உள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் மையங்களை உருவாக்கி வரும் நிலையில்மாணவர்களின் இந்தக் குறைபாட்டைக் களையவும், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புக்களில் பிறமாணவர்களுடன் போட்டியிடும் வகையிலும், தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் ஆங்கிலத் திறனைஅதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் வர்த்தக ஆங்கில சான்றிதழ் கல்வியை அறிமுகப்படுத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்காக உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆங்கில வகுப்புகளை கேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகம் நடத்தும். இந்தக் கல்விக்கான பாடங்கள், புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சியை பிரிட்டிஷ்கவுன்சிலே ஏற்பாடு செய்யும்.
பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 3 மாதம் இந்தப் பயிற்சி தரப்படும். இதன் பிறகு நடத்தப்படும் தேர்வில்வெற்றி பெறுவோருக்கு கேம்ப்ரிட் பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் உலகஅளவில் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் 12,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஆங்கிலக்கல்வியை எந்தெந்த கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவது என்பதை தமிழக தொழில்நுட்பக் கல்வித்துறை முடிவுசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications