ரயில் மோதி 3 ரயில்வே தொழிலாளர்கள் சாவு
சென்னை:
சென்னை ஆவடி அருகே ரயில் மோதி ரயில்வே தொழிலாளர்கள் 3 பேர் பலியாயினர்.
துரைசாமி(56), பொன்னுசாமி (57), ஏகாம்பரம்(56) ஆகிய ரயில்வே தொழிலாளர்களும் பட்டாபிராம்- ஆவடிஇடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு ரயில் வந்ததால் தண்டவாளத்தில் இருந்து விலகி பக்கத்துக்கு தண்டவாளத்தில் மூவரும் நின்றனர்.அப்போது அந்த தண்டவாளத்தில் திருப்பதி-சென்னை கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
ஆனால், அந்த இடம் வளைவான இடம் என்பதால் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதை மூவரும் கவனிக்கவில்லை. சரக்குரயிலின் சத்தத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஓசையும் கேட்கவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதி, அரை கிமீ தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இதில்மூவரின் உடல்களின் கீழ்பகுதிகளும் அடியோடு சிதைந்து போய்விட்டன. மூவருமே சில நிமிடங்களிலேயேஉயிரிழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications