காளிமுத்து, ஓ.பி, பொன்னையன் டெல்லியில் முகாம்
டெல்லி:
தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து, நிதியமைச்சர் பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர்பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல மத்திய அரசின் அனுமதியைப் பெற அவர்கள்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி அப்துல் கலாமையும் அவர்கள் சந்திக்கக் கூடும் என்றுகூறப்படுகிறது.
சிகிச்சைக்காக முதலில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த ஜெயலலிதா இப்போது லண்டன் செல்லும் முடிவில்இருப்பதாகவும், அதற்காக சசிகலா உள்ளிட்ட 18 பேருக்கு 2 மாத விசாவைக் கோரவுள்ளதாகவும் தெரிகிறது.
முதல்வர் வெளிநாட்டுப் பயணம் செய்ய மத்திய அரசின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். மேலும் மருத்துவச்செலவுகளுக்கு என ஏராளமான அன்னிய செலாவணியையும் கோருவதாகத் தெரிகிறது. கோரப்பட்ட நிதியைப்பார்த்தவுடன் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாகவும் ஒரு செய்தி வருகிறது.
மேலும் ஜெயலலிதாவுடன் இத்தனை பேர் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து ஜனாதிபதியிடம் முறையிட அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே காளிமுத்து, பன்னீர், பொன்னையன் ஆகியோர் தமிழக அரசு டெல்லியில் புதிதாகக் கட்டியுள்ளதமிழ்நாடு இல்லத்தின் கட்டடத்தையும் பார்வையிட்டனர். இந் நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஜனாதிபதிஅப்துல் கலாமை உரையாற்ற வருமாறு அழைக்கவே இவர்கள் வந்துள்ளதாக அரசின் சார்பில் செய்தி கசியவிடப்படுகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications