ஆண்டனி ராஜினாமா: புதிய முதல்வர் சாண்டி?
திருவனந்தபுரம்:
கேரள முதல்வர் ஆண்டனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து புதிய முதல்வர்தேர்வு இன்று நடக்கிறது.
கோஷ்டிப் பூசலுக்குப் பெயர் போன காங்கிரஸ் கட்சியில் கேரளத்தில் மோதல் எப்போதுமேஉச்சத்தில் இருக்கும். மூத்த தலைவர் கருணாகரனுக்கும் ஆண்டனிக்கும் நடக்கும் மோதல் உலகப்பிரசித்தம்.
ஒருவரை ஒருவர் காவு வாங்குவதிலேயே கட்சியை காலி செய்து வருகின்றனர். இந்த கோஷ்டிமோதலால் கடந்த மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் காங்கிரஸ்வென்றது.
இதையடுத்து ஆண்டனியை நீக்க வேண்டும் என்ற கருணாகரனின் கோஷம் தீவிரமடைந்தது.இவர்களின் கோஷ்டி சண்டையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த முஸ்லீம் லீக்கும் தேர்தலில்படுதோல்வி அடைந்தது. இதனால் அவர்களும் ஆண்டனியை நீக்க வேண்டும் என நெருக்கடி தரஆரம்பித்தனர்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சேர்த்து கருணாகரன் விமர்சனம் செய்ததால்ஆண்டனி தப்பித்து வந்தார். ஆனால், ஆண்டனியை நீக்காவிட்டால் ஆளும் கூட்டணியில் இருந்துமுஸ்லீம் லீக் விலகிவிடும் சூழலும், இதனால் ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆண்டனியை வைத்துக் கொண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது என்றநிலை ஏற்பட்டுவிட்டது.
இதையடுத்து நேற்று திருவனந்தபுரம் வந்த சோனியா காந்தி, முதல்வர் பதவியில் இருந்துவிலகுமாறு ஆண்டனிக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஆளுநரிடம் தனது ராஜினாமாகடிதத்தை ஆண்டனி வழங்கினார்.
இந் நிலையில் புதிய முதல்வர் தேர்வு இன்று நடக்கிறது. இதனைப் பார்வையிட கட்சியின் மூத்ததலைவர்களான பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்ரெட் ஆல்வா ஆகியோர் கட்சியின்மத்தியப் பார்வையாளர்களாக இன்று திருவனந்தபுரம் வருகின்றனர்.
கேரள காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஒம்மன் சாண்டி அல்லது சபாநாயகர்வைக்கம் புருஷோத்தமன் ஆகியோரில் ஒருவர் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றுதெரிகிறது. இதில் ஒம்மன் சாண்டி, ஆண்டனியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருவாரியான எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்ற சாண்டிக்கே முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாகத்தெரிகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா












Click it and Unblock the Notifications