செப். 1ல் ஜெயலட்சுமி மனு விசாரணை
மதுரை:
போலீசாரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப, முன் ஜாமீன் கோரி, ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை வரும் புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
மதுரை திடீர் நகர் இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் மைத்துனரான கோவையைச் சேர்ந்த நகைக் கடை அதிபர்முருகவேல், தன்னிடம் 73 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஜெயலட்சுமி பணம் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக சிவகாசி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் ஒரு பஞ்சு வியாபாரியும் ரூ. 25 லட்ச மோசடி வழக்கை ஜெயலட்சுமி மீது பதிவு செய்துள்ளார்.
போலீசார் குறித்த உண்மைகளைப் போட்டு உடைத்ததால், தன் மீது இந்த போலி வழக்குகளை போலீசாரேசெட்-அப் செய்திருப்பதாகவும், இதனால் இந்த வழக்குகளில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஜெயலட்சுமி மனு செய்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை இன்று நடக்க இருந்தது.
இந்த மனு இன்று காலை நீதிபதிகள் தினகர், சிங்காரவேலர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜெயலட்சுமி தொடர்பான வழக்கை வேறு ஒரு டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருவதால் அவரது முன்ஜாமீன் மனு குறித்த விசாரணையை அந்த பெஞ்சே நாளை மறுநாள் விசாரிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
ஜெயலட்சுமியின் முன் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டால் இன்றே அவரைக் கைது செய்ய போலீசார் தயாராகஇருந்தனர். இதன்மூலம் காவல்துறை அதிகாரிகளின் காமச் சேட்டைகள் குறித்து தினந்தோறும் ஜெயலட்சுமிஎடுத்துவிட்டு வரும் தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது ஜெயலட்சுமி போலீஸ் பாதுகாப்பில் மதுரை பெண்கள்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுதினம் நடக்கும் விசாரணையின்போது முன் ஜாமீன் மறுக்கப்பட்டால், ஜெயலட்சுமி கைதுசெய்யப்படலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications