நதிகள் இணைப்பு: மத்திய அரசு மீது புகார்
டெல்லி:
நதிகள் இணைப்பு தொடர்பான பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப் போவதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கில், 10 ஆண்டுகளுக்குள் நாட்டின் தேசிய நதிகளை இணைக்குமாறு உச்ச நீதிமன்றம்ஏற்கனவே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களையும்கண்காணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந் நிலையில் ரஞ்சித் குமார், நிகில் நையார் ஆகியோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில் உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி அமைக்கப்பட்ட நதி நீர் இணைப்புக்கான கமிட்டிக்கு புதிய தலைவரைக் கூட இந்த அரசுநியமிக்கவில்லை. பாஜக அரசால் நியமித்த சுரேஷ் பிரபு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு வேறுயாரையும் இந்த அரசு நியமிக்கவில்லை என்றப புகார் கூறியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சபர்வால், நீதிபதி தர்மாதிகாரி ஆகியோர் இன்று நடத்தினர்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் வகான்வதி, அடுத்த மாதம் கூடும் மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் நதிகள் இணைப்பு தொடர்பான விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன,இந்தப் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டு வந்த ரூ. 5,00,000 கோடி நதிகள் இணைப்புத் திட்டத்தை இந்த அரசு கைவிடவில்லை.இந்தத் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தர 6 வார கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications