ஜெ. பயணத்துக்கு இடைஞ்சல்: கலாமிடம் முறையீடு?
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்வது தொடர்பாக பிரதமர், மத்திய நிதிமைச்சகம், வெளியுறவுஅமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதில் உள்ள இழுபறிகள் குறித்து ஜனாதிபதி அப்துல் கலாமிடம்அதிமுகவின் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள் 12 பேரும், தமிழக சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்து, நிதியமைச்சர்பொன்னையன், பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதிடாக்டர் மைத்ரேயன், சட்டசபை செயலாளர் ராஜாராமன் ஆகியோரும் ஜனாதிபதி மாளிகையில் கலாமைசந்தித்தனர்.
சட்டசபையில் உரையாற்றுகிறார் கலாம்:
அப்போது தமிழக சட்டசபையில் உரையாற்ற வேண்டும் என்று கலாமிடம் கேட்டுக் கொண்டனர். இந்த அழைப்பைஉடனடியாக ஏற்றுக் கொண்ட கலாம், அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் கூட்டத் தொரிடல் உரைநிகழ்த்துவதாக உறுதியளித்தார்.
அப்போது ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை அதிமுக எம்.பிக்கள்வலியுறுத்தினர். மேலும் முக்கிய பிரச்சனையாக ஜெயலலிதாவின் வெளிநாட்டுப் பயணமும்விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தன்னுடன் சசிகலா மற்றும் நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்பட 12 மிதல் 18 பேருக்கு ஜெயலலிதாதரப்பில் இருந்து 60 நாட்களுக்கும் மேல் விசா கோரப்பட்டதாகவும அதை வெளியுறவுத்துறை அனுமதிக்கமறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. 2 மாதங்களுக்கும் குறைவாகவே விசா தர முடியும் என்று வெளியுறவுத்துறைகூறியுள்ளது.
அதே போல வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அதிக அளவில் அன்னிய செலாவணி கோரப்படுவதாகவும்அதற்கு நிதியமைச்சகம் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மற்றும் சசிகலாமீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு உள்ளதை மத்திய நிதித்துறை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்தும் ஜனாதிபதியிடம் அமைச்சர்களும் எம்.பிக்களும் முறையிட்டதாகத் தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications