தீவிரவாதத்தை வெல்ல முடியாது: புஷ் ஒப்புதல்
நியூயார்க்:
தீவிரவாதத்தை வெல்லவே முடியாது என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் புஷ், நேற்று முறைப்படி அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நியூயார்க்கில் நடந்த இந் நிகழ்ச்சியின்போதுபுஷ்ஷைக் கண்டித்து போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த ஆர்பாட்டத்தினரில் நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந் நிலையில் என்பிசி தொலைக்காட்சிக்கு புஷ் அளித்துள்ள பேட்டியில்,
தீவிரவாதத்தை நாம் வெல்லவே முடியாது. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்துவோரை ஆதரிப்பவர்களை தடுக்க முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இருந்துஅமெரிக்கா பின் வாங்கினால் அது அடுத்த தலைமுறையினருக்கு பெரும் கேடுகளை விளைவிக்கும்.
இந்த உலகில் நாம் நமது பலவீனத்தை வெளிக்காட்ட முடியாது. அப்படி வெளிக் காட்டினால் அதைநமது எதிரிகள் தங்கள் வெற்றிக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்றார்.
புஷ்ஷின் இந்தப் பேச்சையே தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில்ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது. அக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான்கெர்ரியும், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜான் எட்வட்ர்ஸ்சும் புஷ்ஷைகடுமையாகத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற ஒன்றை எதற்காக புஷ் ஆரம்பித்தார் என்று கேள்விஎழுப்பியுள்ள அவர்கள், சர்வதேச அளவில் புஷ் நிர்வாகம் அடைந்த தோல்வியின் எதிரொலி தான்அவர் டிவி பேட்டி என்று கூறியுள்ளனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications