ஜெவை பற்றி கலாமுக்கு தெரியும்: கருணாநிதி
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரியும் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏழுமலையின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு, கருணாநிதிபேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றி கிடைத்துவிட்டது; இனி வேலை முடிந்து விட்டது என்று திமுகதொண்டர்கள் இருந்து விடக்கூடாது. தமிழக சட்டசபையில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி அப்துல் கலாமைஅதிமுக பிரதிநிதிகள் அழைத்திருக்கிறார்கள். அவர் வருகிறாரோ இல்லையோ, அழைத்த காரணம் என்ன என்பதைஉணரவேண்டும்.
ஆந்திராவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தததும், புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து சொல்லவும் அறிவுரைவழங்கவும் கலாமை அழைத்தார்கள். அவரும் வந்து சட்டசபையில் உரையாற்றினார். சின்ன குழந்தைகளைஅழைத்து கலாம் அறிவுரை சொல்லி வருகிறார். அதே போல் தமிழக சட்டசபையிலும் புத்திமதிதேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்களோ என்னவோ?
எப்படிப்பட்ட இடத்துக்கு யாரை அழைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சபாநாயகராககாளிமுத்து இருந்தாலும் ஆட்சியின் தலைவராக இருப்பவர் ஜெயலலிதா. அவர் சட்டமன்றத்தை மட்டுமல்லநீதிமன்றத்தின் நீண்ட படிக்கட்டுகளை கூட தாண்டிக் கொண்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சொத்து குவிப்பு வழக்கு ஆதாரங்கள், பெரும் அலைகழிப்புக்கு பின்னர்பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கத்தான் கலாமை அழைக்கிறார்கள்.
அவர் உலகத்தையே படித்தவர். ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தவர். அவரை ஏமாற்றினாலும் எடுத்துக்கூறும் நிலையில் உள்ள எங்களை ஏமாற்ற முடியாது என்றார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications