கிரிக்கெட்: இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வி
நாட்டிங்காம்:
நாட்வெஸ்ட் சேலஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில்இங்கிலாந்திடம் தோற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். காயம்காரணமாக இந்திய அணியில் சச்சின் டெண்டுகல்கர் ஆட வில்லை. அவருக்கு பதிலாக ரோகன் கவாஸ்கர்அணியில் இடம் பெற்றார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், கேப்டன் கங்குலியும் களம் இறங்கினர்.
கடந்த சில மாதங்களாக சரிவர விளையாடமல் இருக்கும் ஷேவாக் நேற்றும் ஏமாற்றினார். 12 பந்துகளில் 4 ரன்எடுத்த நிலையில் ஹாக் பந்தில் வாகனிடம் கேட்ச் வெளியேறினார்.
பின்னர் வந்த வி.வி.எஸ். லட்சுமண், கங்குலியுடன் இணைந்து நேர்த்தியாக அடித்து ஆடினார்.
அனியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தபோது, 11.5 ஓவரில் கங்குலி (24 ரன்) வார்ப் பந்தில் ஜோன்ஸ்சிடம்கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 62. சிறிது நேரத்தில் லட்சுமணும் (29 ரன்) வார்ப்பந்தில் அவுட் ஆனார்.
யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்த டிராவிட்டும் 13 ரன்னில் வார்ப் பந்தில் அவுட் ஆகி ஏமாற்றினார். இதனையடுத்துகயூப் நிதானமாக ஆடிக் கொண்டிருக்க மறுமுனையில் யுவராஜ்சிங் ரன் அவுட் ஆனார். அப்போது அணியின்ஸ்கோர் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 89.
பின்னர் ரோகன் கவாஸ்கர், கயூப்புடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது.ஆனால் இதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஸ்கோர் 129-ஐ எட்டியபோது 20 ரன் எடுத்து இருந்த ரோகன்பிளின்டாப் பந்தில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த பதான் 3 ரன் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் கயூப் அரை சதம் அடித்து, ஹார்மிசன் பந்தில்அவுட் ஆனார். பின்னர் வந்த பாலாஜி, நெக்ரா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினர். இதனால் 43.5ஓவர்களில் இந்தியா 170 ரன்னில் சுருண்டது.
171 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் டிரெஸ்கோதிக்கும்,சோலங்கியும் விளையாடத் தொடங்கினர். இவர்கள் எஹிதாக ரன் குவித்து வந்தனர்.
12.5 ஓவரில் 63 ரன்களை இங்கிலாந்து எட்டியபோது, முதல் விதகெட் விழுந்தது. 33 ரன் எடுத்திருந்த டிரஸ்கோதிக்பாலாஜி பந்தில் யுவராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பின்னர் வந்த கேப்டன் வாகன் பாலாஜி பந்தில் டக் அவுட் ஆனார். இதனையடுத்து சோலங்கியுடன் ஸ்டிரவுஸ்ஜோடி சேர்ந்தார். சோலங்கி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். ஆனால் மேலும் இரண்டு ரன்கள் சேர்த்தநிலையில் சோலங்கி பதான் பந்தில் அவுட் ஆனார்.
பின்னர் பிளின்டாப் ஸ்டிரவுசுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 32.2ஓவரில் இங்கிலாந்து 171 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications