காவிரி: கர்நாடகத்துக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தை முடக்கும் கர்நாடகத்தின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே பல்லாண்டுகளாக நீடித்து வரும் காவிரிப்பிரச்சனையில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்அடிப்படையில் மத்திய அரசு 1991ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
இந்த நடுவர் மன்றம் கர்நாடகம், தமிழகத்துக்கு மாதா மாதம் அளிக்க வேண்டிய தண்ணீர் அளவைதீர்மானித்து இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
தொடர்ந்து நடுவர் மன்றம் தாவா சம்பந்தமான அனைத்து விசாரணைகளையும் முடித்து அடுத்த சிலமாதங்களில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
இந் நிலையில் கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தைமாற்றி அமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் இந்தப் போக்கு காவிரிப் பிரச்சனையை மீண்டும் கிடப்பில் போடுவதாகும். இதுதமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
எனவே கர்நாடகத்தின் நியாயமற்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டுமெனவும்ஏற்கனவே அறிவித்தவாறு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வெளியிட உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார் என். வரதராஜன்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications