நாட்வெஸ்ட்: தொடரை இழந்தது இந்தியா
ஓவல் :
நாட்வெஸ்ட் சேலஞ்ச் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் தோற்றதன் மூலம் தொடரைவெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில்வென்றால் தான் தொடரைக் கைப்பற்றுவதற்க வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.டாஸ் வென்ற கங்குலி இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார்.
இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் சுருண்டதால், ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 105ரன்கள் எடுத்து அந்த அணி திணறியது. பின்னர் பிளின்டாப், கோலிங்வுட் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது.இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்தனர். பிளின்டாப் 99 ரன்களில் அவுட்டானார்.கோலிங்வுட் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியத்தரப்பில் ஹர்பஜன் சிங், சேவக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்குத் திரும்பினர். சேவக் (0),கங்குலி(7), யுவராஜ் (24), பதான் (0) ஆகியோர் வந்த வேகத்திலேயே வெளியேற, கைப் மட்டும் அதிகபட்சமாக51 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்தியா 46.3 ஓவரில் 237 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, தோற்றது.
ஆசிய கோப்பை, ஹாலந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடர்களை அடுத்து நாட்வெஸ்ட் தொடரிலும் இந்தியாசாதிக்கத் தவறி விட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications