விரைவில் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைப்பு
தருமபுரி:
வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் தமிழக தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப்படும் என்று மாநில தேர்தல்ஆணையர் பழனிச்சாமி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சட்டப் பேரவை,நாடாளுமன்றத் தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பது குறித்து முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிச்சாமி கூறியதாவது:
கடந்த 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் 234 தொகுதிகளின் எல்லைகளை வரையறுப்பதற்கு கமிஷன்அமைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மாற்றியமைக்கமுடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் மக்கள் தொகை 6.24 கோடி ஆகும். 2.66 லட்சம் மக்களுக்கு ஒரு சட்டசபைத் தொகுதி என்ற வகையில்தொகுதி எல்லைகள் வரையறுக்கப்படும்.
தொகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின்பு, இது குறித்த அறிக்கை மத்திய, மாநில அரசு இதழ்களில்வெளியிடப்படும். பின்னர் தொகுதி வாரியாக மக்களிடம் கருத்து கேட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். 2006-ம்ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குள் இப்பணிகள் முடிவடையும்.
தொகுதி எல்லைகளை மாற்றி அமைப்பதால் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில், எந்த வித மாற்றமும்இருக்காது. திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும், தஞ்சாவூரில் 2 தொகுதிகளும் குறைக்கப்படும்.
அதே நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும், திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூடுதலாக 2 தொகுதிகளும் உருவாக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications