பொடா: சிபிஐ விசாரணை கோரும் நக்கீரன் கோபால்
சென்னை:
தன் மீது பொடா வழக்கு போடப்பட்டது, இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்ட விதம் ஆகியவைகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் நக்கீரன்ஆசிரியர் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.
அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது, தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஆகியகாரணங்களைக் காட்டி நக்கீரன் கோபால் பொடா சட்டத்தில் கைது செய்யப்படடார்.
இவர் மீது இந்த வழக்கு போடப்பட்டது சரியா என்பது குறித்த மனு பொடா மறு ஆய்வுக் கமிட்டிமுன் விசாரணையில் உள்ளது. இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் நான் பொடாவில் கைது செய்யப்பட்ட விதம், அதன் பின்னணி, வழக்கு போடப்பட்டதற்கானகாரணங்கள், முதலில் வேறு வழக்கில் கைது செய்துவிட்டு பின்னர் அதை பொடா வழக்காகமாற்றியது ஆகியவை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியம் தமிழக அரசுக்கும் சிபிஐக்கும் நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தனது உத்தரவில்நீதிபதி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி விசாரணைக்காக சிபிசிஐடி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டகோபால் பின்னர் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அது பொடாவழக்காக மாற்றப்பட்டது.
252 நாள் சிறையில் இருந்த அவர் டிசம்பர் 20ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மீதானவழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications