ஜன. 1-ல் சேது சமுத்திர பணிகள் தொடங்கும்
மதுரை:
சேது சமுத்திரத் திட்டப் பணிகளை அடுத்த வருடம் ஜனவரி 1-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டிதொடங்கி வைக்கிறார்.
ரூ. 2,000 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டத்தைத் தொடங்க நேற்று முன் தினம் நடந்த மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து தூத்துக்குடி துறைமுகபொறுப்புக் கழகத் தலைவர் ரகுபதி கூறியதாவது:
வரும் ஜனவரி மாதம் இத்திட்டத்தை தொடங்கினால் 18 மாதங்களில் பணிகளை முடித்து 2007-ம் ஆண்டில் இக்கால்வாயில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்து விடலாம். இத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்பும், தொழில் வளர்ச்சியும் பெருகும்.
இத் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது. பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் 12.8 மீட்டர் ஆழத்துக்குகடலில் கால்வாய் தோண்ட வேண்டும் என்ற சில துறைமுகத்தினர் விடுத்த கோரிக்கையை நாங்கள் ஏற்கவில்லை.10.7 மீட்டர் மட்டுமே ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டத்தைத் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்க மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications