பொடா சட்டம் விரைவில் ரத்து: மன்மோகன் சிங்
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்ய விரைவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்பு முதன் முறையாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்திய மன்மோகன் சிங்அப்போது கூறியதாவது:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பொடா சட்டத்தை ரத்து செய்யும் வகையில் மசோதாகொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றப் பணிகள் சுமுகமாக நடைபெறாததால், அதுநிறைவேறவில்லை.
இருப்பினும், பொடா சட்டத்தை ரத்து செய்ய மத்திய விரைவில் அவசரச் சட்டம் கொண்டுவரும்.
நதிநீர் பகிர்வுப் பிரச்சினை மிகவும் உணர்வுப் பூர்வமானது. நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்த செய்து பஞ்சாப் அரசுசட்டம் நிறைவேற்றியிருப்பது கவலையளிக்கிறது.
கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் கூடிப் பேசி ஒருமித்தகருத்தை எட்ட வேண்டும்.
ஆட்சியைப் பிடிக்கும் உரிமை அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு என்றாலும், தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியைஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும்.
வீரசாவர்க்கர் குறித்து மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்தக் கருத்து. மத்திய அரசின்கருத்தல்ல.
இந்தியா-, சீனா நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண இந்தியாவிரும்புகிறது. இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 20ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சீனா அடைந்துள்ள முன்னேற்றம் காரணமாக அந்நாட்டின் மீது எனக்குநன்மதிப்பு உண்டு. சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செல்ல ஆர்வமாக உள்ளேன்.
பிரதமர் பதவி சவாலானது, கெளரவமானது. இப் பதவியில் அமர வேண்டும் என்று நான் விரும்பவில்லை.ஆனாலும் இதை நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன் என்றார் மன்மோகன் சிங்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications