இந்திய- பாக். வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தைநடத்தினர். 3 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
காஷ்மீர் உள்பட இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து விவகாரங்கள் குறித்தும்விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்குர்ஷித் மெகமூத் கசூரி இருவரும் தங்களது துறைச் செயலாளர்கள், அதிகாரிகள் கொண்டகுழுவினருடன் இச் சந்திப்பில் பங்கேற்றனர்.
முன்னதாக நேற்று இரு நாட்டு வெளியுறவுத்துறைச் செயலாளர்களும் சந்தித்துப் பேசினர். காஷ்மீர்,தீவிரவாதிகள் விவகாரம் குறித்து ஒரு பக்கம் பேச்சு நடத்தினாலும், இரு நாட்டு பொருளாதாரஉறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications