திருட்டு விசிடி போராட்டம்: கண்டுகொள்ளாத நடிகர்கள்
சென்னை:
திருட்டு விசிடியை எதிர்த்து தமிழ்த் திரையுலகினர் மேற்கொண்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டம்இன்றுடன் முடிவடைகிறது.
திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும், திருட்டு விசிடியைப் புறக்கணிக்கவேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்வதற்காகவும் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைநடிகர், இயக்குநர் பார்த்திபன் தொடங்கினார்.
கடந்த 6 நாட்களாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், முக்தாசீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், லியாகத் அலிகான், நடிகர்கள் அருண்பாண்டியன்,பாக்கியராஜ், மன்சூர் அலிகான், பார்த்திபன், எஸ்.வி.சேகர் உட்பட 23 தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள்கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளிதரன்செய்தியாளர்களிடம் பேசுகையில், திருட்டு விசிடியைத் தயாரிப்போர், விற்பனை செய்வோர் குண்டர் சட்டத்தில்கைது செய்யப்படுவார்கள், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மிகக் கடுமையான உத்தரவை முதல்வர்ஜெயலலிதா பிறப்பிக்க வேண்டும்.
ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்த மறு நாளே இந்த திருட்டு விசிடித் தயாரிப்பாளர்கள் தங்களது தவறானதொழிலைக் கைவிட்டு விடுவார்கள், திருட்டு விசிடிப் பிரச்சினைக்கும் முடிவு வரும் என்றார். தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் முடித்துக் கொள்வதாகவும் முரளிதரன் தெரிவித்தார்.
நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது, திருட்டி விசிடியை ஓழிக்க ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்த வேண்டும்என்று கூறினார்.
உண்ணாவிரத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பேசுகையில், 30நாட்ளுக்குள் திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்று நான் காவி உடை உடுத்தியிருக்கிறேன். அதற்குள் ஒருநல்ல முடிவு ஏற்படாவிட்டால் நான் தீக்குளிப்பேன். திருட்டு விசிடியை ஒழிக்க முடியாமல் ஒரு பேடியாக நான்வாழ விரும்பவில்லை என்று கூறினார்.
திருட்டு விசிடியை எதிர்த்த திரையுலகின் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னணி நடிகர்கள்,நடிகையர் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications