காவிரியை சிக்கலாக்குகிறது கர்நாடகம்: மார்க்சிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடக அரசின் தவறான அணுகுமுறையால் தான் காவிரிப் பிரச்சனை மீண்டும் சிக்கலாகிஇருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், கர்நாடகம் இடையே நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காமல் போனதால், உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த மன்றம் மாதாமாதம் தமிழகத்துக்கு வழங்க வேண்டியநீரின் அளவை நிர்ணயித்து கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.

14 ஆண்டுகால விசாரணையை நடத்தி சில மாதங்களில் தீர்ப்பளிக்க உள்ளது. இந் நிலையில் அந்த மன்றத்தையேகலைக்க வேண்டும் என கர்நாடகம் மனு தாக்கல் செய்துள்ளது. இது பிரச்சனையை மீண்டும் கிடப்பில் போடும்செயல். ஏற்கனவே காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மேலும் அநீதி இழைக்க கர்நாடகம்முயல்வது சரியல்ல.

காவிரி நதி நீர் ஆணைய உறுப்பினராக உள்ள கர்நாடக முதல்வர் தலைகீழாக மாறிப் பேசுவது நேர்மையல்ல.எனவே உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் வாதங்களை தமிழக அரசு தனது வழக்கறிஞர்களைக் கொண்டுமுறியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.

சுய நிதி கல்லூரிகளுக்கும் கவுன்சிலிங்

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமணன், மத்தியக் குழு உறுப்பினர்சங்கரய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் நிர்வாக கோட்டாவான 50 சதவீத இடங்களுக்கு ஒற்றைச் சாளரமுறை தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ராமன் கமிட்டி நிர்ணயித்தகட்டணத்தை விட சுயநிதிக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஏதுவாகும்.

இதனால் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் சுயநிதி, மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புகிடைக்காது. எனவே ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவாதப்படுத்தும் வகையில் மாநிலஅரசும், மத்திய அரசும் உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+